ஷங்கரின் கிராபிக்ஸ் எனக்கு வேண்டாம் – நடிகர் வடிவேலு

வைகைப்புயல் என்று போற்றப்படும், நகைச்சுவை மன்னனாக கருதப்படும் வடிவேலு தமிழ்த் திரையுலகில் தனக்கென்று மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தை தன்வசம் வைத்திருப்பவர். இன்றளவில், சமூக வலைத்தளங்களில் உலாவரும் மீம்ஸ்களில் இவர்தான் கிங் என்று சொல்லலாம். 18 வருடங்களுக்கு முன் இவர் நடித்த “நேசமணி” என்ற கதாபாத்திரம், கடந்த வாரம்தான் உலக அளவில் டிரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது பலராலும் வியப்பாக பார்க்கப்பட்டது.

உலக அளவில் “நேசமணி” டிரெண்டானதும் வடிவேலுவைத் தொடர்பு கொண்டு பலரும் பேட்டி எடுத்தனர். முதலில் அது பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாத வடிவேலு, நேற்று ஒரு இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். முக்கியமாக “இம்சை அரசன் 24ம் புலிபேசி” இரண்டாம் பாகம் பட விவகாரத்தைப் பற்றி பயங்கர கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார், வடிவேலு.

Tamil Comedy Actor Vadivelu

தற்போது, வடிவேலு பட வாய்ப்புகளில் இருந்து விலகி இருப்பதற்கு காரணம், சிலர் அவருக்கு எதிராக வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில், சீமான் அவர்கள் தலையிட்டு பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துவைத்த பின்பும் வேறு சிலர் இவரை புறக்கணிப்பதாகவும் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

“இம்சை அரசன் 23ம் புலிகேசி” இரண்டாம்பாகம் முழுபெறாமல் இருப்பதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் அவர்களின் தலையீடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் என்று ஒருவர் இருக்க, தயாரிப்பாளர் இந்த படத்தின் இயக்கத்தில் தலையிடுவது இப்படத்தின் போக்கை மாற்றிவிடும் என்றும், ஷங்கர் அவர்கள் ஒரு ஆக்க்ஷன் டைரக்டர், அதனால் ஒரு ஆக்ஷன் படத்தில் அவர் சொல்வதை அப்படியே நடிக்கலாம், ஆனால் நகைச்சுவை பாத்திரத்தில் இதுபோல் எடுபடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஷங்கரின் படங்களின் பாடல் காட்சிகளில், கிராபிக்ஸ் காட்சிகளை மேற்கோள் காட்டி – இப்படி கிராபிக்ஸ் வைத்து பெரிய ஹிட் கொடுக்கும் ஷங்கர், நகைச்சுவைக்கு கிராபிக்ஸ் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். வடிவேலுவின் இந்த பேச்சு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top