அமலா பால் – ஆடை படத்திற்கு “A” செர்டிபிகேட்

நடிகை அமலா பால் நடித்துள்ள படம் “ஆடை”, இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்துள்ளதால் தணிக்கைக்குழு இப்படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது. இயக்குனர் தரப்பு பல விளக்கங்களை தந்த பிறகும் அவற்றை ஏற்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. “ஆடை” படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவர் ஆபாசமாக நடித்திருக்கிறார் என்று இப்படத்தின் ஆரம்ப செய்திகளில் உலாவந்தன. தற்போது, தணிக்கை குழுவின் “ஏ” சான்றிதழ் இதை உறுதி செய்துள்ளது.

ஏகத்துக்கும் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் நிறைய இருப்பதால் இந்த படத்திற்கு “ஏ” செர்டிபிகேட் தான் வழங்க முடியும் என்று தணிக்கை குழு உறுதியாக சொல்லிவிட்டது.

Amala Paul in Aadai Movie
Amala Paul in “Aadai”

பெண் ஒருவர் ஆடை இல்லாமல் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறார், அவர் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை என்றெல்லாம் இயக்குனர் தரப்பிலிருந்து எடுத்து கூறியும், படத்தின் காட்சிகளை பார்த்த தணிக்கை குழு இதனை ஏற்க மறுத்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் படத்தின் பல காட்சிகளை தணிக்கை குழு “கேட்” செய்துள்ளதாகவும் செய்து வந்துள்ளது. இயக்குனர் விஜயை திருமணம் செய்திருந்த நடிகை அமலா பால், அவருடன் விவாகரத்து ஆன உடனிலிருந்தே தன்னுடைய முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரைகுறை ஆடைகளுடன் தன புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். ஆடை விஷயத்தில் தன்னை ஒரு சுதந்திர பறவையாக காண்பித்து சமூக வலைத்தளங்களில் வளம் வந்தார் அமலா பால்.

தற்போது “ஏ” சான்றிதழுடன் வெளிவரும் “ஆடை” படத்தின் மூலம் நடிகை அமலா பாலின் மீது ரசிகர்களின் பார்வை மாறும். “மேயாத மான்” படத்தின் இயக்குனர் ரத்தின குமார் தான் “ஆடை” படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தை தவிர்த்து, “அதோ அந்த பறவை போல்” மற்றும் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் அமலா பால்.

“ஆடை” படத்திற்கு “ஏ” வழங்கியுள்ளதால் இப்படத்தை தொலைக்காட்சியில் திரையிடப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால், இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் பிசினஸில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் நல்ல விலைக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபாசமாக நடித்தால், ஏதோ ஒரு விதத்தில் பணத்தை சம்பாரித்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top