பிக் பாஸ் நிகழ்ச்சியில் நானா? கொந்தளிக்கும் அப்சரா ரெட்டி

Apsara-Reddy.jpg

தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி, பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது. சீசன் 1 & 2 என்று இரண்டு முறை இந்த ரியாலிட்டி ஷோ முடிந்த நிலையில் தற்போது சீசன் ஜூன் மாதம் 23 ஆம் தேதி முதல் தொடங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் பாப்புலாரிட்டிக்கு காரணம், செல்போன், தொலைக்காட்சி பெட்டி என்ற எந்த தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டுக்குள் நூறு நாட்கள் தங்கியிருக்க வேண்டும்; வீட்டுக்குள்ளேயே பல்வேறுவிதமான போட்டிகளும் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். இது தான் இந்த நிகழ்ச்சியில் விதிக்கப்படும் விதிமுறைகள்.

இந்த நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017ல் முதலில் துவங்கியது. இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் நிகழ்ச்சியின் முடிவில், வீட்டில் இருந்தவர்களில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அடுத்து, 2018ல் இரண்டாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதையும் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்தான். இதில் வெற்றி பெற்றவர் ரித்விகா. அவரும் தற்போது நடிகையாகி விட்டார்.

இதையடுத்து, மூன்றாவது சீசன் என்று சொல்லப்படும் பிக்பாஸ் சீசன் 3, ஜூன் 23 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதையும் தொகுத்து வழங்கப்போகிறவர் நடிகர் கமல்ஹாசன் தான். இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் டி.ராஜேந்தர், நடிகை கஸ்தூரி, ரமேஷ் திலக், ராதாராவி, சாந்தினி தமிழரசன் என பலரும் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதில், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டியும் கலந்து கொள்ளவிருப்பதாக செய்தி பரவியது.

இந்த செய்தியினை மறுத்து, தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அப்சரா ரெட்டி. தனது டுவிட்டரில் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதாக வந்த செய்தி தவறானது. முதல் சீசனில் பங்கேற்க அழைப்பு வந்தது, அதை நிராகரித்தேன். தற்போது 3வது சீசனிலும் பங்கேற்கவில்லை. ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க எனக்கு விருப்பம் இல்லை. அப்படி இருக்கும்போது, அந்த நிகழ்ச்சியில் நான் எப்படி கலந்து கொள்வேன்? இப்படியொரு செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. இருந்தாலும், மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி போன்ற எந்தவொரு ரியாலிடி ஷோவிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.


Transgender personality, Apsara Reddy has denied the news about her participation in the upcoming Bigg Boss Season 3, in Tamil that will be relayed in Vijay TV.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top