மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

மழை, தமிழ், மழலை, மலர், தித்திப்பு, புன்னகை, கண்மணி என சில வார்த்தைகளை உச்சரிக்கும் போதே மனம் சிலிர்க்கும். ஒவ்வொருவர் ரசனையும் வெவ்வேறு தான், இருந்தாலும் மழையை விரும்பாத உயிர் உண்டா என்றால் உண்டு.ஒழுகாத கூரையுடன், ஒதுங்க ஓரிடம் இல்லாதவர்களுக்கு மழை எதிரி தான்.
மழையில் கரையும் மனிதர்கள் அவர்கள்.

மழைக்காலம் இயற்கை நம்மீது பொழியும் இரக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் மழைக்காலம் கொண்டு வரும் பருவக்கால நோய்கள், அதனை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பது தனிக்கதை.

மழைக்காலம் பெண்களுக்கு இரட்டைச் சுமை, தன்னையும் காத்து குடும்பத்தினர் ஆரோக்கியத்தையும் பேணவேண்டும். இந்த அழகிய மழை பெண்களின் அழகிய கூந்தலை எப்படி பாதிக்கிறது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதை அலசுவோம்!

முடி உதிர்தல்

Hair care

சர்வசாதாரணமாக தலைக்கு குளிக்கும் போது ஐம்பது முதல் நூறு முடி வரை உதிரும் என்றால், மழைக்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடி 200 வரை உதிரும். இதற்கு தீர்வு தலை முடியினை ஈரம் இல்லாமல், உலர்வாகவே வைக்கவும்.

கூந்தலுக்கான வேதிப்பொருட்களை தவிருங்கள்! (avoid hairstyle products)

காற்றில் ஈரப்பதம் மிகுந்த இருக்கும் காலம் என்பதால் முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும் ஆகவே கூந்தலுக்கு முடிந்த வரை தேவையில்லாத வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை (hair colouring, gel…etc) தவிருங்கள். இவை கூந்தலை மேலும் எண்ணெய் பிசுக்கு போலாக்கும். இதனால் முடி உதிர்வதோடு மட்டுமின்றி பொடுகு வேறு ஏற்படும்.

புரோட்டின் உள்ள உணவை உண்ணுங்கள்!

Protein Content
கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து தான். உணவில் புரோட்டின் மிகுந்த முட்டை, மீன், தானியங்கள், டிரைப்ரூட்ஸ், கேரட், கீரைகள், பால் என தேர்வு செய்து உண்ணுங்கள். வலுவான கூந்தலுக்கு புரதச்சத்து இன்றியமையாதது.

மிதமான ஷாம்புவை பயன்படுத்தவும்! (use mild shampoo)

மழையில் நனையும் சூழல் வாய்த்தால், தலைமுடியினை நன்கு அலசிக்குளிக்கவும். குளிப்பதற்க்கு மிதமான ஷாம்புகளை உபயோகிக்கவும்.

கண்டிஷனர் பயன்படுத்துங்கள்! (Use hair conditioner properly )

கூந்தலுக்கான போஷாக்கு அளிக்கும் வகையில் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்துங்கள். இயன்றவரை இயற்கை பொருட்கள் உள்ள கண்டிஷனரை  பயன்படுத்துங்கள். இயன்ற பொழுதெல்லாம் கறிவேப்பிலை சாறு அருந்துங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மழைக்காலம் என்றாலும் கூட நிறைய தண்ணீர் குடிக்கவும்.

மழை மனிதர்க்கு இன்றியமையாதது என்றால் முடி மங்கையர்க்கு அழகிய சொத்து. மழையை போற்றி, முடியை காப்பாற்றுவோம். சில நிமிடங்களின் மெனக்கெடல்கள் நமது சிகையலங்காரத்தை மெருகேற்றும்  என்பதில் ஐயமில்லை.

Main reason for hair fall during monsoon is excess humidity in the air. Use of chemical based products mainly during this season will make hair very greasy. Besides feeling icky and causing hair fall, it can also damage scalp and cause dandruff too. Select protein rich foods to eat such as egg, fish, cereals, dry fruits, carrot, spinach, milk. Protein is the important source for hair growth as it strengthen hair follicles, which in turn prevents hair fall. Use mild shampoos and conditioner properly to prevent hair fall or hair loss.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top