Tamil Cinema

எமன் – விமர்சனம்


இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி வெற்றிக் கனியை பறித்துக் கொடுத்த ஜீவா ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி இணைந்திருக்கும் படமே எமன்.

டத்தின் கதை,

படத்தின் துவக்கத்திலேயே அப்பா விஜய் ஆண்டனியை தன் சதியால் கொலை செய்கிறார் அருள்ஜோதி. அம்மாவையும் பறிகுடுத்த மகன் விஜய் ஆண்டனி தன் தாத்தா சங்கிலி முருகனின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகிறார். தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத குற்றத்திற்கு பொறுப்பேற்று ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு அரசியல் பிரச்சினை அவரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.வான தியாகராஜனிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்ற ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள்ஜோதி, விஜய் ஆண்டனியையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்.

 இந்நிலையில் மியா ஜார்ஜுக்கு அருள்ஜோதியின் மகன் தொல்லை கொடுக்க, தன் நண்பர் விஜய் ஆண்டனியிடம் உதவி கோர, அருள்ஜோதியை நேரடியாக எதிர்க்கிறார். இதனால் கடுப்பான அருள்ஜோதி விஜய் ஆண்டனியை கொள்வதில் தீவிரம் காட்ட, இதிலிருந்து தப்பிக்க அரசியலில் நுழையும் விஜய் ஆண்டனி, அவருக்கு எதிரான தடைகளை தகர்த்து, சூழ்ச்சிகளை எவ்வாறு முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

 விஜய் ஆண்டனி வழக்கம்போல அமைதியான, அதே சமயம் களத்தில் இறங்கிவிட்டால் அதிரடியான சுபாவம் உடையவரான கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். நடனக் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.

மியா ஜார்ஜு நடிகையாக வந்து போகிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. மீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக வரும் தியாகராஜன் மிரட்டியுள்ளார். மாரிமுத்து, ஜெயக்குமார், அருள்ஜோதி, சார்லி, சங்கிலி முருகன், லொள்ளு சபா சுவாமிநாதன் என அத்தனை பேரும் தங்கள் பங்கை அளித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் மிரட்டிய விஜய் ஆண்டனி, பாடல்கள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை. என் மேலே கைவச்சா காலி மட்டும் பழைய மேட்டாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் நேரக் கடத்தல்.

இயக்குனர் ஜீவா ஷங்கர் ராம் கோபால் வர்மா ஸ்டைலில் ஒரு அரசியல் கேங்க்ஸ்டர் படத்தை தர முயற்சித்துள்ளார். ஆனால் இரண்டையுமே சரிவர கையாள்வில்லை என்பதே உண்மை. இருந்தாலும் சாணக்யத்தனமான வசனங்களில் முத்திரை பதிக்கிறார்.