sheeba India

முடக்குவாத நோயாளிகளுக்காக மும்பை மாணவிகளின் புது முயற்சி! – VOICE CONTROLLED INTELLIGENT WHEEL CHAIR


மும்பை நியூ பன்வெல் பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு டிப்ளமோ படித்துக்கொண்டிருக்கும் ஷீபா இசையழகன், மற்றும் அரூஷா கோலே இருவரும் இணைந்து முடக்குவாத நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் ஒரு வீல்சேரை டிசைன் பண்ணியுள்ளனர்.

VOICE CONTROLLED INTELLIGENT WHEEL CHAIR – குரல் கேட்டு இயங்கும் சக்கர நாற்காலி என அதற்கு பெயர் வைத்துள்ளனர்.

இது பற்றி மாணவி, ஷீபா இசையழகன் கூறுகையில், கழுத்துக்கு கீழே உடல்பகுதி செயல்படாமல் வீல்சேரை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேரலைஸ்-முடக்குவாத நோயாளிகளை கருத்தில் கொண்டு இதை டிசைன் செய்திருக்கிறோம்.

அதாவது, FORWARD, BACKWARD, RIGHT, LEFT & STOP என்ற கட்டளைக்குரல்களுக்கு கட்டுப்பட்டு இந்த நாற்காலி இயங்கும். இன்னும் ஒரு முக்கிய அம்சமாக இந்த நாற்காலி சென்று கொண்டிருக்கும்போது, முன்னே மனிதர்களோ பிற பொருட்களே எதிர்ப்பட்டால், தடைபடுவது போல வந்தால் நாற்காலி தானாகவே நின்றுவிடும்.., நாற்காலியில் உள்ள சென்சார் அதற்கு உதவுகிறது என்கிறார்.

இப்போதைக்கு கட்டளை ஆங்கில மொழியில் இருக்கிறது, என்றாலும் வேறு எந்த மொழிக்கும் இதை மாற்றி டிசைன் பண்ண முடியும் என்கிறார்கள் இந்த மாணவிகள்.

இது இப்போது அடிப்படையாக டிசைன் செய்துள்ளோம்… இதில் இன்னும் பல மாற்றங்கள் செய்து அப்டேட் செய்ய முடியும் என்கிறார்கள்.

நியூ மும்பை பகுதி கல்லூரிகளுக்கு இடையிலான ரோபோ செயல்திட்ட போட்டியில் முதல் பரிசை தட்டிசென்றுள்ள இந்த மாணவிகளில் ஷீபா இசையழகன் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை பூர்விகமாக்க் கொண்டவர்.

உலக மகளிர் தினத்தில் இவர்களை பாராட்டுவதோடு, இன்று பல முயற்சிகள் செய்ய வாழ்த்துவோம்.