Vikram Vedha Review India News

விக்ரம் வேதா – விமர்சனம் | Vikram Vedha Review


விக்ரம் வேதா – விமர்சனம்

விக்ரமாதித்தியன் / வேதாளம் கதை தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன மினி கதைச்சுருக்கம். விக்ரமாதித்ய ராஜா ஒவ்வொரு முறையும் பல காடு மலை கடல் தாண்டி போய் வேதாளத்தை பிடிச்சிட்டு வருவாரு. வரும் வழியில் வேதாளம், ராஜா கிட்ட கதை சொல்லிட்டே வரும். வரவேண்டிய இடத்துக்கு பக்கத்துல வந்த உடனே, கதை முடிஞ்சிரும். விக்ரமாதித்யன் கிட்ட, வேதாளம் ஒரு கேள்வி கேட்கும். அதுக்கு பதில் சொல்ல முடியாம ராஜா தெணறுவாரு. வேதாளம் எஸ்கேப் ஆகிப்போயிரும்.அங்க டீல் அதுதான், கேட்கிற கேள்விக்கு பதில்சொல்ல முடியலேன்னா, எஸ்கேப்.

அதே தான் இங்க. ஆனா, ராஜாவும் வேதாளமும் இல்ல. போலீசும் ரௌடியும். போலீஸ் மாதவன், ரௌடி விஜய்சேதுபதி.

விக்ரமாதித்தனாகிய போலீஸ் மாதவன், வேதாளமாகிய ரௌடி விஜய்சேதுபதியை எத்தனை முறை பிடிக்க முயற்சி செய்கிறார், விஜய்சேதுபதி எத்தனை முறை கதை சொல்கிறார்., கதைகளில் முடிவில் என்ன கேள்வி கேட்டார்… அதான் கதை. அதான் திரைக்கதை.

மாதவனும் விஜய் சேதுதியும் பக்கா பொருத்தம். பக்கா மெரட்டல். பக்கா அசத்தல். திரையில் எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் அத்தனை பேரையும் மறந்துட்டு இவங்க ரெண்டு பேரையும் தான் பாக்கிறோம். அதையும் தாண்டி கவனிக்க வைக்கிற இன்னொருத்தர் யார் என்றால், கதாநாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

உறவு ரீதியில் பார்த்தாலும் தொழில் ரீதியாக பார்த்தாலும் மாதவன், ஸ்ரத்தா செம காம்போ, கட்டிப்பிடிக்கிறதா இருந்தாலும் கட்டிங் போடுறதா இருந்தாலும் அப்டி ஒரு கம்பெனி ரெண்டு பேரும். சாம் சி.எஸ். இசையும், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவும் விக்ரம் வேதாவின் பலமாக கைகோர்க்கின்றன.

கதிர் மற்றும் வரலட்சுமி சரத்குமாரும் உண்டு. போதிய தீனிதான் இல்லை இருவரும். மாதவன், விஜய்சேதுபதி போட்டி போட்டு நடிக்கிறாங்க. சில பல ட்விஸ்ட்கள், சில பல துரோகங்கள், பலப்பல தோட்டாக்கள், என கதை சொல்லும் விதத்தில் முன்பாதி சிறப்பு என்றாலும் பின்பாதியில் முன்னும் பின்னுமாக போய் வருவதில்… கொஞ்சம் குழம்புது. லைட்டா டயர்டாகுது. மற்றபடி புஸ்கர் காயத்திரி கணவன் மனைவி ரெண்டு பேரும் சேர்ந்த  இயக்கியுள்ள  விக்ரம் வேதாவுக்காகவும் விக்ரமின் பொண்டாட்டிக்காகவும் நீங்க தியேட்டர் தேடி போகலாம்..