veeraiyan inico prabhakar Tamil Cinema History

இரட்டைப்புறா – சேவல்: அ.தி.மு.க பிளவிற்கும் வீரையனுக்கும் என்ன சம்பந்தம்?


இரட்டைப்புறா – சேவல்:  அ.தி.மு.க பிளவிற்கும் வீரையனுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ் சினிமாவில் யதார்த்த படங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், புதுமையான யதார்த்தம் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? வீரையன் படத்தில் யதார்த்தம் என்பதை புதுமையாக முயற்சி செய்திருக்கிறோம் என்கிறார், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பரீத்.

90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது வீரையன் கதை.  ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என்ற 3 கதைகளோடு தொடங்கும் படம்

ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே மூன்று புள்ளிகளும் ஒன்றாக இணையும்.

சோழ மன்னர்கள் ஆட்சி செய்த தஞ்சாவூர் கால ஓட்டத்தில் தடம் புரண்டு இன்று எவ்வாறு இருக்கிறது என்பதையும்  படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்பை தாண்டி இருக்கும் இப்படம்.  கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதிய வகை எதார்த்த சினிமாவாக இருக்கும்.

இன்று போல அன்று அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து ஜானகி அணியாகவும் ஜெயலலிதா அணியாகவும் இருந்தார்கள். தேர்தல் வந்தபோது இரண்டு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. வீரையன் கதை, அந்த காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கதைக்கள பின்னணியில் அந்த காலகட்டத்தை அப்படியே பிரதிபலிப்பதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம் என்கிறார், பரீத்.

இரட்டைப்புறா, சேவல், வீரையன் புதிய வகை யதார்த்தம் என வீரையன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரொம்பவே எகிற வைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறான், புதுமையான யதார்த்த வீரையன்.

– முருகன் மந்திரம்