Uru Movie Review Tamil Cinema

Uru Editor’s View | உரு, சிறப்பு பார்வை!


உரு / விமர்சனம்
புதிய தலைமுறையின் இளைய இயக்குநர் புதிது புதிதாக யோசிக்கிறார்கள். அயல்மொழி சினிமாக்களும், முக்கியமாக அயல்தேச சினிமாக்களும் நிரம்பவே அவர்களை யோசிக்க வைக்கின்றன.
அப்படி அயல்மொழி சினிமாக்களும், அயல்தேச சினிமாக்களும் தந்த பாதிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான், உரு.
உரு என்றால் உருவம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் போல. ஆனால், யார் உருவம், எந்த உருவம் என்று நீங்கள் படம் பார்த்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு பிரபலமான, புகழ்மிக்க எழுத்தாளன், காலப்போக்கில் கவனிக்கப்படாமல் போகிறான். காரணம், அவன் கதைகள் கவனிக்கப்படாமல் போகிறது.
தான் கவனிக்கப்பட்டே ஆக வேண்டும், என் கதை மீண்டும் கொண்டாடப்பட்டே ஆக வேண்டும், என புதியதாக ஒரு கதை எழுத மேகமலைக்குச் செல்கிறான்.
அங்கே, அவன் அந்த புதிய கதையை எழுதி முடித்தானா? மீண்டும் புகழ் பெற்றானா, என்பது தான் நீங்கள் உரு பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய கதை.
கலையரசன், இளம் எழுத்தாளனாக சிறப்பாக செய்திருக்கிறார். மைம் கோபி உள்ளிட்ட பிற கதாபாத்திரங்கள், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே உருவில் தேவையான அளவுக்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஆனால், அந்த சிறப்பான எல்லாவற்றையும் விட மிக மிக சிறப்பு, உருவின் கதைநாயகி, சாய் தன்ஷிகா.
இரவும் இருளும் குளிருமான மலைப்பிரதேசத்தில், கதையின் கனத்தை விடவும் கனமாக தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
உருண்டு புரள்வதில் ஆகட்டும், மிரண்டு பயந்து ஓடித் தப்பிக்க நினைப்பதில் ஆகட்டும், திமிர்ந்து நிமிர்ந்து திருப்பித் தாக்குவதில் ஆகட்டும், பொறுமை, புத்திசாலித்தனமாகட்டும், காதல் நிரம்பிய பார்வைகளாகட்டும், மிக சராசரியான மனைவியின் தேவைகளை கண்களில் காட்டுவதில் ஆகட்டும், தன்ஷிகா தனியாகவே தாங்குகிறார். கடைசியாக அந்த எழுத்தாளினி… கதாபாத்திரமாக சிறப்பாளினி ஆக ஆளுமை செய்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து ஒரு திசையில் போகும் கதை எப்படி முடிகிறது என்பதை, பார்க்கையில் அந்த மாற்றம், திகைப்பூட்டுகிறது.

சராசரி சினிமா கதைசொல்லல்கள் இருந்து வேறு மாதிரி சினிமா பார்க்க விரும்புபவர்களுக்கும், வெளிநாட்டு சினிமா விரும்பிகளுக்கும், உரு… அந்த அனுபவங்களைத் தரும்.

 

Uru Movie Review

Uru Movie Review