Vijay Antony Sasi Pitchaikkaaran Tamil Cinema

பால் போடுறவன்… பால்காரன், பேப்பர் போடுறவன்… பேப்பர்காரன், அப்போ, பிச்சை போடுறவனைத்தானே பிச்சைக்காரன்னு சொல்லணும்!???? -இது விஜய் ஆன்டனி லக லக!


பால் போடுறவன்… பால்காரன், பேப்பர் போடுறவன்… பேப்பர்காரன், அப்போ, பிச்சை போடுறவனைத்தானே பிச்சைக்காரன்னு சொல்லணும்!????

– இது விஜய் ஆன்டனி லக லக!

விஜய் ஆன்டனியை தன்னுடைய டிஸ்யூம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கிய இயக்குநர் சசியும் விஜய் ஆன்டனியும், இயக்குநர் நடிகராக முதன்முறையாக இணைந்துள்ள படம், பிச்சைக்காரன்.

பிச்சைக்காரனின் டிரெய்லர் பார்ப்போரை ஈர்க்கிறது. அந்த டிரெய்லரில் தான் இப்படி ஒரு வசனம் வருகிறது. முதன்முறையாக கேட்கும்போது கண்டிப்பாக சிரிக்காமல் இருக்கமுடியாது.

பிச்சைக்காரன் படம் வரும் மார்ச் நான்காம் தேதி உலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் வெளியாகிறது .

படத்தை வெளியிடும், கே ஆர் பிலிம்ஸ் சரவணன், ” இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம் . இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனி பாணி கமர்ஷியம் படம் .

விஜய் ஆண்டனி பேசும்போது ” என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான்,  டிஷ்யூம் படத்துல ! அவரோட படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன் . அவர் சொன்ன கதை இது . கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறி குமுறி அழுது விட்டேன்.

இந்தப் படத்தை தயாரித்து நடித்ததற்காக பெருமைப் படுகிறேன்

இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன் . என்னை பிச்சைக்காரர்கள்  மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரதத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள் . சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம் . அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது .

ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது . நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன்  . இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் .