Tamil Cinema

‘’எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்’’ – பார்த்திபன் காட்டம்


பாஜக தலைவர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததால் ஏற்கனவே விஷால், பிரசன்னா கழுவி ஊற்றிய வேளையில் பார்த்திபனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

‘’கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க வைத்துவிடுவார்களோ?. வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!

மரியாதைக்குரிய ஹெச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..! நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும், அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!’’ என்று தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.