vijay sethupathi Tamil Cinema History

கருப்பனும் காதலிகளும்…


கருப்பனும் காதலிகளும்…

பொதுவாக காதலில் கொஞ்சூண்டு காமமும் சேர்த்து செம ஸ்கோர் பண்ணுகிற நாயகர்கள் என்றால் அவர்கள் கொஞ்சம் வெள்ளைத்தோலாக இருப்பார்கள், படித்த கதாபாத்திரங்களாக, புத்திசாலி கதாபாத்திரங்களாக இருப்பார்கள் என்ற புரிதலை அடித்துத் தவிடு பொடியாக்குகிறார், கருப்பன் விஜய்சேதுபதி.

கமல்ஹாசனோ, அர்விந்த்சாமியோ, அஜித்குமாரோ…. தான் இந்த வகை ரொமான்டிக் மற்றும் கதாநாயகிகளுடனான கெமிஸ்ட்ரியில் கை தேர்ந்தவர்கள் என்பதை விஜய்சேதுபதி திருத்தி எழுதுகிறார் என்றே தோன்றுகிறது.

விஜய்சேதுபதியின் படங்களில் நடித்த கதாநாயகிளில் 3 கதாநாயகிகள் பளீச்சிட்டார்கள் நினைவில். ஐஸ்வர்யா ராஜேஷ், ரெம்யா நம்பீசன், தான்யா.

vijay sethupathi

சஞ்சிதா ஷெட்டி, நயன்தாரா, மடோனா செபாஸ்டியன் உள்பட மற்ற கதாநாயகிகளுடனும் விஜய்சேதுபதிக்கு கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருந்திருக்கலாம். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி படங்களும், ரெம்யா நம்பீசனுடன் சேதுபதியும், தான்யாவுடன் கருப்பனும் ரொம்ப ரொம்ப ஸ்பெஷலாக தோன்றுகிறது எனக்கு.

vijay sethupathi_aishwarya rajesh

vijay sethupathi_aishwarya rajesh

அதற்கு முக்கிய காரணங்களாக இந்த படங்களின் இயக்குநர்களையும் இசையமைப்பாளர்களையும் குறிப்பிட வேண்டும். பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ரம்மி, கருப்பன் படங்களின் இசையமைப்பாளர் இமான், சேதுபதி படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோரின் பாடல்கள் விஜய்சேதுபதியின் ரொமான்ஸ்க்கு உற்றதுணையாக கற்றதுணையாக கைத்துணையாக இருந்திருக்கின்றன.

vijay sethupahi_dhanya

vijay sethupahi_dhanya

நேற்று பார்த்த கருப்பன் படத்தில் விஜயசேதுபதி, தான்யாவின் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் சேர்ந்துதான் இப்படி எழுத வைத்தது. பொண்டாட்டியும் புருஷனுமாக விஜய்சேதுபதியும் தான்யாவும் குழையும் போதெல்லாம் திரையெங்கும் நிரம்பி வழியும் காதல் கண்களை பதம் பார்த்து இதம் சேர்க்கிறது. இப்படி காதலும் காதல் நிமித்தமுமாக வாழ வேண்டும் என்றோ, வாழ கொடுத்துவைக்கவில்லையே என்றோ உங்களுக்கு நிச்சயமாக தோன்றும். மற்றவை உங்கள் யோசனைகளுக்கும் கமெண்டுகளுக்கும் விடுகிறேன்.

கருப்பனுக்கும் காதலிகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

– முருகன் மந்திரம்