Tamil Cinema

வாழ்த்தி, கலாய்த்த கமல்ஹாசன் – ஒரு ‘மெர்சல்’ மொமன்ட்


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘மெர்சல்’. இந்தப் படம் கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, நடித்திருந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்று அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் கமலுக்கு அவரது ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் உள்ள தியேட்டரில் ‘மெர்சல்’ படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. கமலுடன் விஜய், அட்லீ இருவருமே அமர்ந்து படத்தைப் பார்த்தனர்.

படம் பார்த்து முடித்த கமல் விஜய், அட்லீ இருவரையும் பாராட்டி வாழ்த்தினார். இருவரும் கமலுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது பின்புலத்தில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் பேனர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல் சமயோசிதமாக கலாய்த்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.