CategoryIndian Cinema


காயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்


தமிழில் 36 வயதிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். மலையாள வரலாற்றில் பலருக்கும் தெரியாமல் போன, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காயம்குளம் கொச்சுன்னியின் கதையை மிகவும் சிரத்தை Continue Reading


30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு


ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் Continue Reading


வடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை :  வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த Continue Reading


சமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.


திரை உலகில் தற்போது  அந்தாலஜி  என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம்  பீ ..பீ ‘ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம்  தற்போது இயக்கி வரும்  ‘சில்லு Continue Reading


என் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா


வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா Continue Reading


இங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி


மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, Continue Reading


சீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்


தேசிய விருது வென்ற  நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் “வட சென்னை  ” . கடந்த 23 .9 .18 ஞாயிறு அன்று Continue Reading


டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”


மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று Continue Reading


மராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”


இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு  உதவும் வகையில்   “கூகை திரைப்பட இயக்கம்” எனும் அமைப்பைஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு  நூலகம் ஒன்றை இன்று துவங்கியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை சாய்ரட் பட இயக்குனர்நாகராஜ் மஞ்சுளே,  நடிகை குஷ்பு, இயக்குனர் ராம்,  லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்தஇயக்குனர்கள் ,உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே …. “ மராட்டிய மானிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியாகஉள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது நன்றிகள் . இங்கு வந்ததும் பரியேறும்பெருமாள் படம் பார்த்தேன்  . இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தைகாட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக்குறித்து நாம் நமது படைப்புகள் மூலமாக ஒருஉரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தும், மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன். என்னோடு பயணிக்கதமிழகத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி. கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்ச்சி இயக்குனர்கள், உதவிஇயக்குனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும், வாசிப்பு என்பது திறைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிகஅவசியம் . புத்தகம் உங்களை செழுமைப்படுத்தும் . இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி”  என்றார்.  விழாவில் பேசிய நடிகை குஷ்பு “இந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்புபழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலைதரும். இந்த நூலகத்தை திறந்திருக்கும் இயக்குனர் பா.இரஞ்சித்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் புத்தகம் மூலம் தான் பலவற்றைத்தெரிந்து கொண்டேன். உதவி இயக்குனராக இருந்த போது ஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போதுதான் ஒன்று தோன்றியது. உதவி இயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று. வாசிப்பின் வழியாகவும்வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும்  ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்தைப் பார்த்தால்அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும். ஆனால் புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனைசெய்ய முடியும். இந்த நல்விழாவிற்கு வருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும்நன்றி” என்றார். Continue Reading