'6 Athiyayam' Movie Audio & Trailer Launch Tamil Cinema Articles

‘6 அத்தியாயம்’, ‘அந்த்தாலஜி’ வகை படம் அல்ல!


‘6 அத்தியாயம்’, ‘அந்த்தாலஜி’ வகை படம் அல்ல!

வித்தியாசமான முயற்சிகள் , பரிட்சித்துப் பார்க்கப்படுவது தமிழ் சினிமாவில்  தொடர்ச்சியாக நிகழும் ஒன்று. அப்படி ஒரு வித்தியாசமான முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில்  சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

'6 Athiyayam' Movie Audio & Trailer Launch

6 athiyaayam

தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ்,  ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் மீதி நான்கு  அத்தியாயத்தையும் இயக்கியுள்ளார்கள்.

இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, முக்கிய ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,   பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

சிம்மா, விஜய் வேலுக்குட்டி, மணி, லோகேஷ், விஜய் ஆன்ட்ரூஸ் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர்

தாஜ்நூர்,  ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ்  சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.  விஜய் டிவி புகழ் ம.கா.பா. ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

‘6 அத்தியாயம்’  படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்  தனஞ்செயன் மற்றும்  இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது. ‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை  தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜனின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.